வெளியான ஐபிஎல் புள்ளி பட்டியல்…, மீண்டும் முதலிடத்தை பிடித்த குஜராத்…, CSKயின் நிலை??

0
வெளியான ஐபிஎல் புள்ளி பட்டியல்..., மீண்டும் முதலிடத்தை பிடித்த குஜராத்..., CSKயின் நிலை??
வெளியான ஐபிஎல் புள்ளி பட்டியல்..., மீண்டும் முதலிடத்தை பிடித்த குஜராத்..., CSKயின் நிலை??

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், தற்போது வரை 42 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், புள்ளிப் பட்டியல் புதுப்பிக்கப்பட்டு வெளியாகி உள்ளது.

ஐபிஎல்:

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த, ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து நடைபெற்று வருகிறது. 70 லீக் போட்டிகளை கொண்ட இந்த தொடரில், தற்போது வரை 42 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதாவது, 10 அணிகளில் 6 அணிகள் தலா 8 போட்டிகளிலும், CSK, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா ஆகிய 4 அணிகள் தலா 9 போட்டிகளிலிலும் விளையாடி முடித்துள்ளன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த போட்டிகளின் வெற்றி தோல்வி அடிப்படையில், குஜராத் டைட்டன்ஸ் அணி, 8 போட்டிகளில் 6 ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் 5 போட்டிகளில் வெற்றி பெற்று தலா 10 புள்ளிகளுடன் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர்.

ஐபிஎல்லில் வரலாறு படைத்த மும்பை இந்தியன்ஸ்…, 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அபாரம்!!

மேலும், தலா 8 புள்ளிகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் 6 மற்றும் 7 வது இடத்தை உள்ளனர். இந்த அணிகளை தொடர்ந்து, இதுவரை 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, தலா 6 புள்ளிகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 மற்றும் 9 வது இடத்தை பிடித்துள்ளனர். இந்த புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 புள்ளிகளுடன் தக்க வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here