எதிர்வரும் ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி, தனது சொந்த ஊரில் விளையாட உள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2023:
இந்தியாவில் முதன் முதலாக மகளிருக்கான பிரீமியர் லீக் தொடர் 5 அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த தொடர் வரும் மார்ச் 26ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், ஆடவருக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்குபெற உள்ள இந்த தொடர் மீது இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த தொடரின் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி மோத உள்ளது. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை மட்டும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றில் அதிக (5) முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, தனது சொந்த மைதானத்தில் விளையாட உள்ள போட்டிக்கான டிக்கெட் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
IND vs AUS: ஒருநாள் தொடரை இழக்கும் பாட் கம்மின்ஸ்…, மீண்டும் கேப்டனை மாற்றிய ஆஸ்திரேலியா!!
அதாவது, மும்பையில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் BookMyShow அப்-பில் தற்போது கிடைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்வரும் ஐபிஎல் தொடரில், ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.