இது என்ன டா மும்பை இந்தியன்ஸ் வந்த சோதனை…, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இத தவிர வேற வழியே இல்லையா??

0
இது என்ன டா மும்பை இந்தியன்ஸ் வந்த சோதனை..., பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இத தவிர வேற வழியே இல்லையா??
இது என்ன டா மும்பை இந்தியன்ஸ் வந்த சோதனை..., பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இத தவிர வேற வழியே இல்லையா??

ஐபிஎல் தொடரின் இறுதி கட்ட லீக் சுற்றுகள் நடைபெற்று வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வழிகள் குறித்து பின்வருமாறு காணலாம்.

மும்பை இந்தியன்ஸ்:

ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் இந்தியாவில், CSK, GT, RCB, MI உள்ளிட்ட 10 அணிகளை மையமாக கொண்டு நடைபெற்று வருகிறது. இந்த லீக் தொடரில், தற்போது ஒவ்வொரு அணியும், தலா 10 முதல் 11 போட்டிகளை விளையாடி முடித்துள்ளனர். இதன்படி, குஜராத் (16), CSK (13), LSG (11) மற்றும் RR (10) புள்ளிகளுடன் முதல் 4 இடத்தை பெற்று, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற முன்னிலையில் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால், இந்த 4வது இடத்திற்கு போட்டியாக, RCB, மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளும் தலா 10 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கின்றன. இதில், ஐபிஎல்லில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது, இந்த பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு உள்ள வழிகளை குறித்து பின்வருமாறு காணலாம்.

இந்த சாதனையையும் CSK விட்டு வைக்கலயா?? ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட முக்கிய புள்ளி விவரம் இதோ!!

அதாவது, இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் தலா 5 ல் வெற்றி தோல்வியை மும்பை இந்தியன்ஸ் (MI) அணி பெற்றுள்ளது. மீதமுள்ள 4 போட்டிகளிலும் MI அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்று முன்னேறும் வாய்ப்பை பிரகாசமாக முடியும். ஆனாலும், 3 ல் வெற்றி 1ல் தோல்வி அடைந்தால், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பார்த்து தான், பிளே ஆப் வாய்ப்பை பெற முடியும். மாறாக, இரண்டில் வெற்றி பெற்றாலும், இதே நிலை தான். ஒருவேளை, ஒரு வெற்றி மட்டுமே பெற்றால், நடப்பு ஐபிஎல் தொடரை விட்டு மும்பை இந்தியன்ஸ் வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here