ஐபிஎல் மினி ஏலம் எப்போது?? எங்கே?? முழு விவரம் உள்ளே!!

0
ஐபிஎல் மினி ஏலம் எப்போது?? எங்கே?? முழு விவரம் உள்ளே!!
ஐபிஎல் மினி ஏலம் எப்போது?? எங்கே?? முழு விவரம் உள்ளே!!

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் லீக்கிற்கு விரைவில் மினி ஏலம் நடத்தப்பட இருப்பதாக முன்பு தகவல் வெளியானது. இந்த மினி ஏலத்திற்கான இடம் மற்றும் தேதி குறித்து இப்பதிவில் காணலாம்.

ஐபிஎல் மினி ஏலம்:

இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிறைந்த உள்ளூர் போட்டிகளில் ஒன்றானது ஐபிஎல் தொடராகும். இந்தியாவில் பிரபலமான இந்த தொடர் தற்போது, பல்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயர்களின் கீழ் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த லீக் தொடரில் இடம்பெற்றுள்ள அணிகள், தங்களது அணியை சிறப்பாக கட்டமைக்க ஏலத்தின் மூலம் திறமையான வீரர்களை எடுத்துக் கொள்வர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த ஏலத்தில், தங்களது அணியின் 3 நட்சத்திர வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ளும் விதியும் உள்ளது. இந்நிலையில், அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் லீக்கிற்க்கான(16 வது சீசன்) அப்டேட் ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில், டிசம்பர் 16 ம் தேதி மினி ஏலத்தை பெங்களூர் அல்லது இஸ்தான்புல் ஆகிய இடங்களில் நடத்தப்படும் என தகவல்கள் பரவலாக வெளிவந்திருந்தன.

T20 WC 2022: 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த நியூசிலாந்து…, இறுதி போட்டிக்குள் நுழைந்த பாகிஸ்தான்!!

ஆனால், தற்போதைய தகவலின் படி, ஐபிஎலின் மினி ஏலம் ஆனது, டிசம்பர் 23 ம் தேதி கொச்சியில் நடைபெற இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. ஆனால், இந்த மினி ஏலம் குறித்த தேதி, அதிகார பூர்வமான தகவல் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here