ஒரே போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை வீரர்…, மகிழ்ச்சியில் சொன்ன அந்த வார்த்தை!!

0
ஒரே போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை வீரர்..., மகிழ்ச்சியில் சொன்ன அந்த வார்த்தை!!
ஒரே போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை வீரர்..., மகிழ்ச்சியில் சொன்ன அந்த வார்த்தை!!

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் தங்களது கடைசி லீக் போட்டியை, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் விளையாடினர். இதில், டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அறிமுக வீரர் விவ்ராந்த் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர்.

இவர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து அசத்தினர். இதில், அறிமுக வீரரான விவ்ராந்த் சர்மா பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை விளாசி 67 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவரை தொடர்ந்து, மயங்க் அகர்வால் 83, ஹென்ரிச் கிளாசென் 18, க்ளென் பிலிப்ஸ் 1, ஐடன் மார்க்ராம்13* என சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதனால், ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை குவித்தது. இதில், மும்பை அணி சார்பாக ஆகாஷ் மத்வால் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இது குறித்து பேசிய ஆகாஷ் மத்வால், “ரோஹித் சர்மா எனக்கு மிகுந்த நம்பிக்கை அளித்து வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here