IPL 2023: டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு…..,

0
IPL 2023: டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு.....,
IPL 2023: டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு.....,

நடப்பு ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் இதுவரை 45 ஆட்டங்கள் முடிவு பெற்றுள்ளது. இந்த ஆண்டு IPL போட்டிகளில் விளையாடும் 10 அணிகளும் இரண்டு குழுக்களாகப் பிரிந்து மற்ற குழுவை சேர்ந்த அணிகளுடன் போட்டியிட்டு வருகிறது. அந்த வகையில் ஒட்டுமொத்தமாக 74 ஆட்டங்களை கொண்ட இத்தொடரின் 46 ஆவது போட்டி பஞ்சாப் கிரிக்கெட் அஸோஸியேஷன் மைதானத்தில் வைத்து இன்று நடைபெற இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமயிலான பஞ்சாப் கிங்ஸ் அணி ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போது, சரியாக இரவு 7:30 மணியளவில் துவங்கும் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளது.

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை., ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு!!!

தற்போது IPL 2023 புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் இவ்விரு அணிகளில் எந்த அணி அடுத்த வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதற்கிடையில், இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் மழையினால் ரத்து செய்யப்பட்டதால் இரண்டு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here