கடைசி பந்தில் வெற்றியை தேடி தந்த ரிங்கு சிங்…, 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி அசத்தல்!!

0
கடைசி பந்தில் வெற்றியை தேடி தந்த ரிங்கு சிங்..., 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி அசத்தல்!!
கடைசி பந்தில் வெற்றியை தேடி தந்த ரிங்கு சிங்..., 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி அசத்தல்!!

ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணியானது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம், 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஐபிஎல்:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16 வது சீசனுக்கான லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் விளைவால், தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் தவான் களமிறங்கினர். இவர்களில், பிரப்சிம்ரன் சிங் 12 ரன்களில் வெளியேற, ராஜபக்ச 0, லியாம் லிவிங்ஸ்டன் 15, ஜிதேஷ் சர்மா 21, சாம் கர்ரன் 4 என சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால், பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை குவித்திருந்தது. இதில், தவான் அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்திருந்தார். இதையடுத்து, 180 ரன்கள் சேஸிங் செய்ய கொல்கத்தா அணி களமிறங்கியது. இதில், ரஹ்மானுல்லா குர்பாஸ் 15, ஜேசன் ராய் 38, வெங்கடேச ஐயர் 11 ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

ஆனால், கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா (51) மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் (42) என அடித்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனாலும், கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், ரசல் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்ப, அடுத்த பந்தில் ரன் அவுட்டானார். எனவே வெற்றிக்கு கடைசி பந்தில் மட்டும் 2 ரன்கள் தேவைப்பட்டது. அதனை, ரிங்கு சிங் பவுண்டரி அடித்து, அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்த வெற்றி மூலம், கொல்கத்தா அணி, 10 புள்ளிகளுடன் 5 வது இடத்தை பிடித்துள்ளது. இதில், பஞ்சாப் அணியானது, அதே 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here