IPL 2023: ‘இம்பாக்ட் பிளேயர் விதி’க்கு நடுவர் இப்படி தான் சிக்னல் விடுவார்…, வெளியான நியூ அப்டேட்!!

0
IPL 2023: 'இம்பாக்ட் பிளேயர் விதி'க்கு நடுவர் இப்படி தான் சிக்னல் விடுவார்..., வெளியான நியூ அப்டேட்!!
IPL 2023: 'இம்பாக்ட் பிளேயர் விதி'க்கு நடுவர் இப்படி தான் சிக்னல் விடுவார்..., வெளியான நியூ அப்டேட்!!

எதிர்வரும் ஐபிஎல் சீசனில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள இம்பாக்ட் விதிக்கு நடுவரது சிக்னல் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

இம்பாக்ட் பிளேயர் விதி:

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் தொடங்க இன்னும் 8 நாட்களே உள்ளன. எதிர்வரும் இந்த சீசனில், கடந்த 15 சீசன்களில் இல்லாத பல புதுமையான விதிகளை புகுத்தப்பட்டு உள்ளது. அதாவது, ஒய்டு மற்றும் நோ பால்களுக்கும் டிஆர்எஸ் (ரீவ்யூ) முறை கேட்க ஐபிஎல் அணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, டாஸ் போட்ட பிறகு கூட பிளேயிங் லெவனை தேர்வு செய்து கொள்ளலாம் உள்ளிட்ட பல புது விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதில், கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் கவர்ந்த விதியாக ‘இம்பாக்ட் பிளேயர் விதி’ உள்ளது. இந்த விதியின் படி, பிளேயிங் லெவனை தேர்வு செய்யும் போதே 4 வீரர்களை கூடுதலாக அறிவிக்கப்படும். இந்த 4 வீரர்களில் ஒருவரை ‘இம்பாக்ட் விதி’ மூலம் போட்டி நடைபெறும் போது, களத்தில் விளையாடும் வீரர்களில் ஒருவருக்கு பதிலாக மாற்றி கொள்ளலாம். அதுவும் அந்த இம்பாக்ட் வீரர், இந்திய வீரராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டு மொத்த அழகையும் ஒத்த புடவையில் காட்டிய ஐஸ்வர்யா மேனன்.., பார்த்த மயக்கத்தில் சொக்கி தவிக்கும் இளசுகள்!!

தற்போது, இந்த விதியை ஐபிஎல் அணி பயன்படுத்த விருப்பம் தெரிவித்தால், நடுவர் எவ்வாறு சிக்னல் அளிப்பார் என்ற அப்டேட் வெளியாகி உள்ளது. நடுவர் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி ஒரு கை மூடியவாறு சிக்னல் விடுவார். இதன் பின் விருப்பம் தெரிவித்த ஐபிஎல் அணி இதனை பயன்படுத்தி கொள்ளும் என தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here