IPL-லுக்கு பிறகு ஹர்திக் பாண்டியாவுக்கு இருக்கும் ட்விஸ்ட்…, அதிரடி முடிவை எடுக்குமா பிசிசிஐ??

0
IPL-லுக்கு பிறகு ஹர்திக் பாண்டியாவுக்கு இருக்கும் ட்விஸ்ட்..., அதிரடி முடிவை எடுக்குமா பிசிசிஐ??
IPL-லுக்கு பிறகு ஹர்திக் பாண்டியாவுக்கு இருக்கும் ட்விஸ்ட்..., அதிரடி முடிவை எடுக்குமா பிசிசிஐ??

எதிர்வரு ஐபிஎல் தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் பட்சத்தில் பிசிசிஐயானது அதிரடி முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது, வரும் 31ம் தேதி முதல் 10 அணிகளுக்கு இடையே கோலகலமாக நடைபெற இருக்கிறது. இந்த தொடர், ஆரம்பவதற்கு முன்னரே இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட இணையதளங்களில், அதிக ரசிகர்கள் பின்தொடரும் அணி எது என்ற போட்டி நிலவி வருகிறது. இந்த அளவிற்கு, ஐபிஎல் குறித்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இத்தகைய எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஹர்திக் பாண்டியா மீது கேப்டன்சிக்கான பொறுப்பு எவ்வாறு இருக்கிறது என்ற கண்ணோட்டமும் அதிக அளவில் இருக்கக்கூடும். அதாவது, கடந்த சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையில் முதன் முறையாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, பட்டத்தையும் வென்று அசத்தி இருந்தது. இதன் பிரதிப்பலிப்பை, ஹர்திக் பாண்டியாவை பிசிசிஐ இந்திய அணியின் கேப்டனாக அவ்வப்போது பரிசோதித்து வந்தது.

நடிகை சிம்ரனின் மகனா இவர்? இப்படி ஆள் அடையாளமே தெரியாம வளர்ந்துட்டாங்களே..,இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!!

மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, ரோஹித் சர்மா டி20 தொடர்களின் கேப்டன் பதவியில் விலகினார். இதன் பிறகு, இன்னும் டி20 தொடருக்கான நிரந்தர கேப்டனை பிசிசிஐ அறிவிக்கவில்லை. ஆனால், தற்போது வரை ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த ஐபிஎல் தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் வெல்லும் பட்சத்தில், பிசிசிஐயானது, சர்வதேச டி20 இந்திய அணி நிரந்தர கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here