அடுத்தடுத்து ஐபிஎல் தொடரை இழக்கும் வெளிநாட்டு வீரர்கள்…, சர்வதேச அணிக்காக விளையாடுவதில் திட்டம்மா??

0
அடுத்தடுத்து ஐபிஎல் தொடரை இழக்கும் வெளிநாட்டு வீரர்கள்..., சர்வதேச அணிக்காக விளையாடுவதில் திட்டம்மா??
அடுத்தடுத்து ஐபிஎல் தொடரை இழக்கும் வெளிநாட்டு வீரர்கள்..., சர்வதேச அணிக்காக விளையாடுவதில் திட்டம்மா??

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடர் நடக்க இருக்கும் வேளையில், வெளிநாட்டு வீரர்கள் சர்வதேச அணிக்காக விளையாட உள்ளதால், ஐபிஎல் தொடரை இழக்கும் அபாயம் எழுந்துள்ளது.

ஐபிஎல்:

மார்ச் 31ம் தேதி நடைபெறவுள்ள, ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்த்து உள்ளனர். சர்வதேச இந்திய அணியை பொறுத்த வரையில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்த ஐபிஎல் தொடரில் தான் கவனம் செலுத்த உள்ளது. இதனால், ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களின் பங்களிப்பை குறித்து கவலை இல்லை.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால், வெளிநாட்டு வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் பங்கு பெறுவது தான் பெரும் கேள்வி குறியாகி உள்ளது. அதாவது, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளானது, மார்ச் 31ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில், ஐபிஎல் விளையாடுவதற்கு நியூசிலாந்து வீரர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால், RCB சார்பாக விளையாடி வரும் இலங்கையின் வனிந்து ஹசரங்க உள்ளிட்டோருக்கு அனுமதி வழங்கப்பட்ட வில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

“ரொனால்டோவை போல் செய்வதை நிறுத்துங்கள்”…, முகமது சிராஜுக்கு ஷமியின் அட்வைஸ்!!

மேலும், பங்களாதேஷ் அணியும் அயர்லாந்து அணிக்கு எதிராக ஏப்ரல் 8ம் தேதி வரை டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதனால், இந்த அணிகளில் உள்ள ஐபிஎல் வீரர்களும் ஏப்ரல் 8ம் தேதி வரை ஐபிஎல் பக்கம் திரும்ப மாட்டார்கள் என கூறப்படுகிறது. இதனால், ஏப்ரல் 8ம் தேதிக்கு மேல் தான், மேற்கண்ட அணிகளில் உள்ள வீரர்கள், ஐபிஎல்லுக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here