IPL 2022 – அதிரடியாக மாற்றப்பட்ட மும்பை அணியின் ஜெர்சி? – இப்பவே எதிர்பார்ப்பு அதிகமாயிடுச்சே!!

0

ஐபிஎல் தொடரில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சி நிறம் மாற்றியமைக்கப்பட அனுமதி மறுக்கப்பட்டதால், அந்த ஜெர்சியின் டிசைன் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ஐபிஎல் தொடரில் மிகவும் புகழ் பெற்ற அணியாக விளங்குவது மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த இரண்டு அணிகளுக்கும் உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளனர். மேலும், இந்த இரண்டு அணிகளை ஸ்பான்சர் செய்வதற்கு, பல்வேறு முன்னணி நிறுவனங்கள் போட்டி போடுகின்றனர். இதில் மும்பை இந்தியன்ஸ் அணியை 90 கோடி ரூபாய் கொடுத்து, டி.ஹச்.எல். மற்றும் வீடியோ கான் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது.

தற்போது இந்த அணியை, ஸ்லைஸ் என்ற குளிர்பான நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதையடுத்து, மும்பை அணியின் ஜெர்சி வண்ணத்தை மாற்றி அமைக்க நிறுவனம் திட்டமிட்டதாம். அதாவது, தற்போது உள்ள நீல நிறத்தை மாற்றி, ஆரஞ்சு நிறத்தை வைக்க திட்டமிட்டதாம். ஆனால், அதை அந்த அணியின் நிர்வாகம் மறுத்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. வேண்டுமானால் ஜெர்ஸியின் டிசைனை மட்டும் மாற்றியமைத்துக் கொள்ளலாம் தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here