ஐபிஎல் 2020 இன்றைய போட்டி: DC vs SRH – முதல் வெற்றியை பெறுமா ஹைதெராபாத்??

0

ஐபிஎல் 2020 இல் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி தனது முதல் வெற்றியை பெரும் முனைப்பில் உள்ளது. அதே நேரம் ஸ்ரேயாஸ் ஐயரின் டெல்லி கேபிடல்ஸ் அணி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் களமிறங்குகிறது. ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2020:

இந்தியா பிரீமியர் லீக் 2020 இன் 11 வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் உடன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் இன்று அபுதாபியின் ஷேக் சயீத் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோத உள்ளது. சன் ரைசர்ஸ் அணி முதல் 2 போட்டிகளிலும் தோல்வி பெற்று பரிதாபகரமான நிலையில் உள்ளது.

டெல்லி அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளதே வெற்றிக்கு காரணமாக உள்ளது. மேலும் காயமடைந்த வீரர் அஸ்வினுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே மற்றும் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ஆகியோர் அணியில் இணைந்தது பந்துவீச்சை பலப்படுத்தியுள்ளது. மறுபுறம் சன் ரைசர்ஸ் அணி பந்துவீச்சில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. அதுமட்டுமின்றி மிடில் ஆர்டரில் பேட்டிங் வரிசையும் சுமாராக உள்ளது.

முதல் 2 போட்டிகளில் விளையாடாத கேன் வில்லியம்சன் இப்போட்டியில் களமிறங்க உள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

உத்தேச 11 அணி:

டெல்லி கேபிடல்ஸ் – ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஷிம்ரான் ஹெட்மியர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷாப் பந்த் (கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே மற்றும் அமித் மிஸ்ரா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, மனிஷ் பாண்டே, விருத்திமான் சஹா (கீப்பர்), பிரிதம் கார்க் / கேன் வில்லியம்சன், முகமது நபி, ரஷீத் கான், அபிஷேக் சர்மா, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது மற்றும் டி நடராஜன்

ஆடுகளம் எப்படி இருக்கும்??

துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஆடுகளம் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும், ஆனால் பந்து வீச்சாளர்களுக்கும் சிறிது வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக நடுத்தர ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும். இரவில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி சேசிங் செய்வதே நல்ல சாய்ஸ் ஆக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

DC vs SRH நேருக்கு நேர் இதுவரை:

  • மொத்த போட்டிகள்: 27
  • டெல்லி : 6 போட்டிகள் வெற்றி
  • ஹைதெராபாத் : 9 போட்டிகள் வெற்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here