சிவில் சர்வீஸ் தேர்வர்களுக்கு முக்கிய தகவல் – UPSC அறிவிப்பு!!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இருந்த 2019 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி தற்போது UPSC அறிவித்து உள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வு:

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. மேலும் வரும் ஜூலை 31ம் தேதியுடன் நாடு தழுவிய ஊரடங்கு முடிய உள்ளது. அதற்கடுத்த நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் இந்தியாவில் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 2019ம் ஆண்டு UPSC நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று வந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்ததை தொடர்ந்து 623 பேருக்கான நேர்முகத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது அவர்களுக்கான நேர்முகத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 623 பேருக்கு வரும் 30ம் தேதி வரை நேர்முகத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அது குறித்த விபரங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக UPSC சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here