இந்திய எல்லைகளில் முப்படைகளின் கண்காணிப்பு தீவிரம் – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

0
இந்திய எல்லைகளில் முப்படைகளின் கண்காணிப்பு தீவிரம் - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்திய எல்லைகளில் முப்படைகளின் கண்காணிப்பு தீவிரம் - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் குன்னூர் வெலிங்டனில் நீர் ,ஆகாயம் மற்றும் தரைவழி என அனைத்து வழிகளிலும் இந்தியாவை பாதுக்காக்க கண்காணிப்பானது தயாராகவுள்ளதாக கூறி இருக்கிறார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்:

ஆப்கானிஸ்தானில் கடந்த பல ஆண்டுகளை ஆட்சியை பிடிப்பதற்காக சண்டையானது நடந்து கொண்டிருந்தது. இந்த போரின் இறுதியில் தாலிபான்கள் வெற்றி பெற்றனர். தாலிபான்களின் ஆட்சியைப் பிடித்தபிறகு ஆசியாவே பதற்றமான சூழலுக்கு உருவாகியுள்ளது. தலிபான்கள் தீவிர மதவாத சிந்தனை கொண்டவர்களாய் இருப்பதால் மக்கள் அனைவரும் பயத்தில் ஆப்கானிஸ்தானை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் சூழல் ஏற்பட்டது.

இந்திய எல்லைகளில் முப்படைகளின் கண்காணிப்பு தீவிரம் - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்திய எல்லைகளில் முப்படைகளின் கண்காணிப்பு தீவிரம் – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மேலும் இவர்களால் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை எனக் கருதி ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அலை அலையாக வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தங்களால் செல்ல முடியவில்லை என்றாலும் தங்கள் குழந்தைகளையாவது காப்பாற்ற நினைத்து மற்றவர்களிடம் கொடுத்து வருகின்றனர். இதனால் மற்ற நாடுகளிலும் பதற்றமான சூழலானது ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றமானது இந்தியாவுக்கு சவால் நிறைந்த சூழலை உருவாக்கியுள்ளது. அதனை எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேலும் ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்திருக்கும் சூழ்நிலையில் இந்திய எல்லையில் கண்காணிப்பானது தீவிர படுத்தப்பட்டுள்ளதாகவும் எந்த சூழலையும் கையாளுவதற்க்கு நாடு தயாராக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here