தீவிரமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்.,, நிரம்பி வழியும் மருத்துவமனைகள்., டாக்டர்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவுரைகள்!!

0
தீவிரமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்.,, நிரம்பி வழியும் மருத்துவமனைகள்., டாக்டர்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவுரைகள்!!
தீவிரமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்.,, நிரம்பி வழியும் மருத்துவமனைகள்., டாக்டர்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவுரைகள்!!

மருத்துவமனையில், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிக அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் சாதாரண வைரஸ் காய்ச்சல் என்பதால் பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட தேவையில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வைரஸ் காய்ச்சல்:

தமிழகத்தின் கடந்த வாரம் முதல், இருமல் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வயது வித்தியாசமின்றி இந்த காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த காய்ச்சல் பரவல், பொதுமக்கள் மத்தியில் தற்போது ஒரு வித பீதியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

Dengue virus, Illustration.

எனவே மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை, எழும்பூர் குழந்தைகள் நலத்துறை இயக்குனர் டாக்டர் எழிலரசி கூறியுள்ளார். அதாவது இந்த காய்ச்சல் குறித்து மக்கள் பயம் கொள்ள வேண்டாம், இது பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் சாதாரண காய்ச்சல் என்று கூறியுள்ளார். இதுபோன்ற காய்ச்சல் வரும்போது உடனடியாக டாக்டரிடம் செல்லுங்கள், மாறாக மருந்தகங்களில் காண்பித்து மாத்திரை வாங்கி சாப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் போது அபாயகரமான கட்டத்தை எட்ட கூடிய வாய்ப்பு இருக்கிறது என எச்சரித்துள்ளார்.

மாநிலத்தில் மாடுகளிடயே வேகமெடுக்கும் ‘லம்பி’ வைரஸ்.,,பால் மூலம் மனிதர்களுக்கு பரவுமா? அச்சத்தில் பொதுமக்கள்!

மேலும் குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தால், பள்ளிக்கு அனுப்பாமல் மருத்துவரிடம் அழைத்து சென்று விட்டு வீட்டில் ஓய்வு எடுக்க வைக்க வேண்டும். தொடர்ந்து சத்தான உணவு, அதிகப்படியான தண்ணீர் குடிப்பதன் மூலம் இந்த காய்ச்சலை எதிர்கொள்ளலாம். இதையடுத்து அனைவரும் மாஸ்க் அணிவது அவசியம் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here