தமிழகத்தில் அரசு போக்குவரத்து துறை ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற பணியாளர் ஒருவர் பயணம் செய்யும் போது, அந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அவரை அவ மரியாதையுடன் நடத்தியுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதையடுத்து ஓய்வு பெற்ற பணியாளர் சம்பந்தப்பட்ட கும்பகோணம் போக்குவரத்து ஆய்வாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். மனுவை பரிசீலித்த ஆய்வாளர் கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிளை மேலாளர்களுக்கும் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது “ஓய்வு பெற்ற பணியாளர்கள் பயணம் செய்யும் போது, அவரை உரிய பேருந்து நிறுத்தத்தில் ஏற்றி இறக்கி கண்ணியத்துடன் நடத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
ஆத்தாடி., பளபளன்னு இருக்கு பாலாடை மேனி., அப்பட்டமாக காட்டி இளசுகளை திணறடிக்கும் ஷிவானி!!
மேலும் “தற்போது ஓய்வு பெற்ற பணியாளர் அவமரியாதை செய்யப்பட்டதை போல், இனி வரும் காலங்களில் நடந்தால் சம்பந்தப்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.