10 நிமிஷத்துல “இன்ஸ்டன்ட் ஓட்ஸ் உப்புமா” ரெசிபி – இனிமே காலை உணவு மிஸ் ஆகாது!!

0

காலை பரபரப்பா பள்ளிக்கோ, கல்லூரிக்கோ அல்லது அலுவலகத்துக்கோ கெளம்பும்போது நேரமின்மை காரணமா நிறைய பேர் காலை உணவை தவிர்த்துருவாங்க. அது ரொம்ப தப்புங்க. காலை உணவு தான் நம்ம உடம்பு ஒரு நாள் முழுவதும் செய்ற பணிகளுக்கு அடித்தளமா இருக்கும். ரொம்ப சிம்பிளா அதே சமயம் ரொம்ப ஆரோக்கியமான “இன்ஸ்டன்ட் ஓட்ஸ் உப்புமா” செஞ்சு காலை உணவா சாப்பிடுங்க, உங்களோட நாள் முழுவதும் நீங்க எப்படி சுறுசுறுப்பா இருக்கீங்கன்னு பாருங்க. அது மட்டும் இல்லாம உடல் எடை குறைய நினைப்பவர்களும் இந்த உணவை சாப்பிடலாம். “இன்ஸ்டன்ட் ஓட்ஸ் உப்புமா” எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
உளுந்து -1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் – 1 பின்ச்
கறிவேப்பில்லை – சிறிது
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கேரட் – 1
பீன்ஸ் – 6
குடை மிளகாய் – பாதி அளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 டீ ஸ்பூன்
இன்ஸ்டன்ட் ஓட்ஸ் – 2 கப்
தண்ணீர் – 2 கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது வெங்காயம், காய்கறிகள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஓட்ஸ் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழ்வழி மாணவர்களுக்கு TNPSC தேர்வில் 20% இடஒதுக்கீடு!!

இப்பொழுது கொதிக்கும் 2 கப் தண்ணீரை கடாயில் ஊற்றி நன்கு கலந்து விட வேண்டும். இதை 5 அல்லது 6 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். கடைசியாக நெய் ஊற்றி கிளறி விட வேண்டும். இப்பொழுது சுவையான, ஆரோக்கியமான ” இன்ஸ்டன்ட் ஓட்ஸ் உப்புமா” ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here