இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் சமூக ஊடகங்களில் பல்வேறு விதமான பதிவுகளை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அந்த வகையில் ஹரியானா குருகிராம் விருந்தினர் மாளிகையில் செக்டார் 38 ல் தங்கி இருந்த விக்ரம் (வயது 28), நேற்று (செப்டம்பர் 11) இன்ஸ்டாகிராம் நேரலையில் வந்து தற்கொலை செய்துள்ளார். இந்த பதிவு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதோடு, தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில் “விக்ரம் ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்தநாளை கொண்டாடி விட்டு, செக்டார் 38ல் பெண் தோழியுடன் இரவு தங்கி இருந்தார். பின்னர் மறுநாள் (அதாவது நேற்று) மதியம் 02.30 மணியளவில் அந்த பெண் கிளம்பி விட்டார். இதன் பிறகு இன்ஸ்டாகிராம் நேரலையில் விக்ரம் தற்கொலை செய்யும் வீடியோவை பார்த்த, அந்த பெண் விருந்தினர் மாளிகைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார் வந்துள்ளனர். அந்த பெண் திருமணமாகாத நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளது.” என தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.