இன்ஸ்டாவில் வந்த புத்தம் புது அப்டேட் – இதுக்கு தாம்பா ரொம்ப நாளா Waiting! குஷியில் பயனர்கள்!!

0
இன்ஸ்டாவில் வந்த புத்தம் புது அப்டேட் - இதுக்கு தாம்பா ரொம்ப நாளா Waiting! குஷியில் பயனர்கள்!!
இன்ஸ்டாவில் வந்த புத்தம் புது அப்டேட் - இதுக்கு தாம்பா ரொம்ப நாளா Waiting! குஷியில் பயனர்கள்!!

மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில், தங்கள் பயனர்களுக்காக புத்தம் புதிய அப்டேட் ஒன்றை சம்பந்தப்பட்ட அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

புதிய அப்டேட்:

உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். இந்த ஆப்பில், உள்ள தங்கள் பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த அந்தப் புத்தம் புதிய அப்டேட்டை instagram நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது இன்ஸ்டாவில் நாம் ஸ்டோரி பதிவிடும் போது, ஒரு நிமிட வீடியோவை பதிவேற்ற நினைத்தால் அதை அப்படியே நேரடியாக பதிவிட முடியாது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதை நான்கு 15 வினாடி வீடியோக்களாக பிரித்து பதிவேற்ற வேண்டிய சூழல் இதுவரை இருந்து வந்தது. இதனால் நாம் பதிவேற்ற நினைக்கும் வீடியோவை 15 வினாடி வீடியோக்களாக, மாற்ற வேண்டிய தேவை இருந்தது.

தமிழகத்தில் களமிறங்குகிறதா ராணுவம்? நிலைமை கைமீறுதாக குற்றச்சாட்டு! பிரதமருக்கு கோரிக்கை!!

இதற்கு தீர்வு காணும் பொருட்டு, அதிரடி சோதனையில் இறங்கிய இன்ஸ்டாகிராம் நிறுவனம், தங்கள் பயனர்கள் எவ்வித சிரமமின்றி ஒரு நிமிட வீடியோவை நேரடியாக பதிவேற்றும் வசதியை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதை நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த பயனர்கள் தற்போது இன்ஸ்டா நிறுவனத்தின் அறிவிப்பால் குஷியில் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here