இன்ஸ்டா பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்… ரீல்ஸ் வீடியோ நேரம் ஒரு நிமிடமாக நீட்டிப்பு!!!

0

இளசுகளுக்கு பெரிதும் பயன்படும் சமூக வலைத்தளமாக இருப்பது இன்ஸ்டாகிராம். இதில் போட்டோஸ், வீடியோஸ் போன்றவைகளை பதிவிட்டு வருகின்றனர். தற்போது இது பற்றிய ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இதில் இருக்கும் ரீல்ஸ் வீடியோ பதிவின் நேரம் 30 வினாடிகளில் இருந்து ஒரு நிமிடமாக நீடிக்கப்பட்டு உள்ளது.

தற்போது உள்ள சூழ்நிலையில் தங்களின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள பெரிதும் பயன்படுவது சமூக வலைதளங்கள் தான். அதிலும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவைகள் பெரிதும் உதவுகின்றன. இந்த இரண்டு செயலிகளும் இல்லாத செல்போன்கள் இல்லை என்ற அளவிற்கு இவை மக்கள் மத்தியில் பரிச்சயமானவை. மேலும் இன்ஸ்டாகிராமில் தங்களின் தனி திறமையை காட்டி பலர் தங்களை முன்னிலை படுத்தி கொண்டு உள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் இளசுகள் தங்களின் பொழுதில் பாதி நேரத்தை கழிக்கின்றனர். மேலும் பலர் தங்களின் தொழிலுக்கு தேவையான மார்க்கெட்டிங், வர்த்தகம் போன்றவைகளை இதன் வாயிலாகவே  செய்கின்றனர். இன்ஸ்டாகிராமில் போட்டோஸ், வீடியோஸ், ஸ்டோரீஸ் உள்ளிட்ட பிரமிக்கதக்க பல வசதிகள் உள்ளன.

இந்நிலையில் இந்த இன்ஸ்டாராகிமில் ஒரு புதிய அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரீல்ஸ்  வீடியோ பதிவிற்கான நேரத்தை நீடிக்கப்பட்டு உள்ளது. அதாவது இதுவரை 30 வினாடிகளாக இருந்த வந்த பதிவு நேரம் தற்போது ஒரு நிமிடமாக நீடிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவல் இன்ஸ்டா பயனாளர்ககளுக்கு குஷியை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here