பானிபூரி வியாபாரி டூ உலகக்கோப்பை ஆட்டநாயகன் விருது வரை – யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சாதனைப் பயணம்..!

0

U19 கிரிக்கெட் உலகக்கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை தனது பேட்டிங்கால் வெளுத்து வாங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பெயர் தான் தற்போது கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

அரையிறுதியில் அதிரடி ஆட்டம்..!

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

தென் ஆப்பிரிக்காவில் தற்போது நடந்து வரும் U19 உலகக்கோப்பையில் அரையிறுதி ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் பிப்ரவரி 4ம் தேதி இந்தியா பாகிஸ்தானுடன் மோதியது. இதில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எதிர்த்து களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் (105) , சக்சேனா (59) அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் மூலம் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

பானிபூரி வியாபாரியின் கிரிக்கெட் வெறி..!

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

கிரிக்கெட் வீரராகும் ஆசையோடு தந்து தந்தையுடன் மும்பைக்கு வந்த ஜெய்ஸ்வால் ஆசாத் மைதானத்திற்கு வெளியில் மாலையில் பானிபூரி வியாபாரம் செய்து தனது பணத்தேர்வைகளை பூர்த்தி செய்து கொண்டார். காலையில் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும் அவர் மாலையில் பானிபூரி வியாபாரம் செய்து வந்தார். தன்னுடன் விளையாடும் மாணவர்கள் பானிபூரி உண்ண வரும் போது சங்கட்டமாக உணர்ந்ததாகவும் தெரிவித்தார். ‘நான் காலையில் ஒரு சதம் அடித்தேன், மாலையில் நான் பானிபூரியை விற்பனை செய்தேன்’ என்று இது குறித்து அவர் தெரிவித்தார்.

முதல் படி..!

இத்தனை கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்துமாறு தனது பயிற்சியாளர் கூறிய அறிவுரையால் உணவு, பணக்கஷ்டத்தை மனதில் வைக்காமல் தனது முழு கவனத்தையும் விளையாட்டில் செலுத்தினார். முதலில் விஜய் ஹசாரே கோப்பை போட்டிக்காக மும்பை அணியில் தேர்வு செய்யப்பட்டார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

இவர் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2020 ஐபிஎல் தொடருக்கு ரூ. 2.4 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

சோயிப் அக்தர் பாராட்டு மழை..!

எனது வார்த்தைகளை நினைவில் வையுங்கள், ஜெய்ஸ்வால் உயரங்களுக்குச் செல்லப் போகிறார். அவருக்கு விளையாட்டின் சக்தி, ஆர்வம் உள்ளது. அவர் மூத்த அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவார், இது ஒரு உத்தரவாதம்” என்று சோயிப் தனது யூடியூப் சேனலில் தெரிவித்தார். மேலும் ஜெய்ஸ்வாலின் வரலாற்றிலிருந்து பாகிஸ்தான் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அவர் சிறந்து விளங்குகிறார், பணம் இப்போது அவருக்கு பின்னால் ஓடுகிறது என்றும் தெரிவித்தார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here