மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – நிலுவையில் உள்ள DA தொகை குறித்த தகவல்!

0

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த மே மாதம் முதல் நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு 2022 ஜனவரி மாதம் முதல் வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அகவிலைப்படி:

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார சரிவால் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. ஊழியர்களின் அகவிலைப்படி தொகையானது நோய்த்தடுப்பு பணிகளுக்கு செலவிடப்பட்டது.

பிறகு தடுப்பூசிகளின் பயன்பட்டால் கொரோனா குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி 11% உயர்த்தப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டது. பிறகு 3% உயர்த்தப்பட்டு தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

2021 ஜூலை மாதம் முதல் முன்தேதியிட்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ஜனவரி மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகையை உயர்த்துவது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான முன்மொழிதலும் சமர்ப்பிக்கப்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த வீட்டு வாடகைப்படி உயர்வால் 11.56 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 18 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு நிலுவையில் உள்ளது. இந்த தொகையை வெளியிடுமாறு மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனையடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% ஆக உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு கடந்த மே மாதம் முதல் நிலுவையில் உள்ளது. இந்த நிலுவைத்தொகை 2022 ஜனவரி மாதம் முதல் வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு பரிசாக மேலும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here