
இந்திய ரிசர்வ் வங்கி இன்று (மே 23) முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றலாம் என அறிவித்துள்ளது. இதன் காரணமாக வணிக வளாகம், பேருந்து உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ரூ.2,000 நோட்டு செல்லுமா? செல்லாதா? என பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் தமிழ்நாட்டில் பேருந்து, டாஸ்மாக், ரேஷன் கடை உள்ளிட்ட அரசு சேவைகளில் ரூ.2,000 நோட்டு வாங்க மாட்டார்கள் என செய்தி வெளியாகியது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக அந்தந்த துறை அமைச்சர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி வணிக வளாகம், அரசு பேருந்து, ரேஷன் கடை, டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நுகர்வோர்கள் வழக்கம் போல் தகுந்த பொருட்களை பெற்று கொண்டு ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம் என தெரிவித்துள்ளனர்.
வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற இது கட்டாயம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
அதேபோல் மெட்ரோ ரயிலில் அதிக தொகைக்கு டிக்கெட், ரீசார்ஜ் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம். இதற்காகவே நகை கடைகளுக்கு ஏராளமானோர் வருவார்கள் என்பதால் கூடுதலாக நகைகளை கடைக்காரர்கள் வாங்கி வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ளாமல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வழக்கம் போல் அனைத்து இடங்களிலும் ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம் என உறுதி அளித்துள்ளனர்.