
இந்தியா அளவில் தமிழ்நாடு மாநிலம் தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கி வருகிறது. ஆனாலும் கழிவுநீர் சுத்தம் செய்ய பணியாளர்கள் தொட்டிக்குள் செல்ல வேண்டி உள்ளதால் அவ்வப்போது உயிரிழப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி கழிவுநீர் சுத்தம் செய்ய இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அண்மையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலும் கூட இப்பணிகளில் ஈடுபடுபவர்களை தொழில் முனைவோராக மாற்ற நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக சென்னையில் நவீன இயந்திரங்களை கொண்டு கழிவுநீர் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது. இதுவரை இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தாததால் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையினருடன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு கூட்டம் மேற்கொண்டார்.
WTC 2023: இந்தியாவை அச்சுறுத்த களமிங்கும் ஆஸ்திரேலிய நம்பர் 1.பவுலர்…, வெளியான நியூ அப்டேட்!!
இதில் “கழிவுநீர் சுத்தம் செய்ய நவீன இயந்திரங்களை அறிமுகப்படுத்தியும் இன்னும் பணியாளர்களை வைத்து வேலை செய்து வருகின்றனர். இந்த பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அடுத்த 4 மாத காலத்திற்குள் இவ்விரு திட்டமும் முழுமையாக செயல்பாட்டுக்கு வர வேண்டும். இனிமேல் கழிவுநீர் சுத்திகரிப்பால் எந்த ஒரு இறப்பும் ஏற்பட கூடாது. அப்படி நேரும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வர் பேசியுள்ளார்.