அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களே., இத கண்டிப்பா பண்ணிடுங்க?? இல்லனா ஓய்வூதியம் கட்!!!

0
அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களே., இத கண்டிப்பா பண்ணிடுங்க?? இல்லனா ஓய்வூதியம் கட்!!!
அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களே., இத கண்டிப்பா பண்ணிடுங்க?? இல்லனா ஓய்வூதியம் கட்!!!

அரசு மற்றும் தனியார் துறை நிறுவன ஊழியர்களின் ஓய்வூதிய நலன் கருதி மாத ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை PF கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஊழியர்களின் அவசர சூழ்நிலை போது பகுதியளவு தொகை பெறுவதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற வசதிகளை தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கான கால அவகாசமாக செப்டம்பர் 30ம் தேதி வரை வாய்ப்புகளை வழங்கி உள்ளனர். இந்த வாய்ப்பை தவற விடும் பட்சத்தில் அவரது கணக்கு முடக்கப்படும் அபாயம் உள்ளது எனவும் தெரிவித்து உள்ளனர். ஆன்லைனில் எளிய முறையில் ஆதார் எண் இணைப்பதற்கான வசதிகளையும் அறிமுகப்படுத்தி உள்ளனர். அதன்படி https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையத்தளத்தில் பணியாளர்களின் ID மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்டு லாகின் செய்ய வேண்டும்.

எதிர்நீச்சல் சீரியல்  நடிகை இனி  விஜய்  டிவிக்கு  தான்.., அதிகாரபூர்வ  அறிவிப்பு!!

Manage என்ற ஆப்ஷனில் KYC என்பதை கிளிக் செய்யவும். இதில் ஆதார் எண் மட்டுமல்லாமல் வங்கி கணக்கு, PAN கார்டு உள்ளிட்ட ஆவணங்களையும் இணைக்கலாம். ஆதார் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி ஈசியாக இணைத்து கொள்ளலாம். இணைக்கப்பட்ட ஆவணத்தை ஆய்வு செய்து ஆதார் இணைத்ததற்கான உறுதி செய்யப்பட்ட குறுஞ்செய்தி மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். இதுதவிர EPFO அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களை கொண்டும் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை தவற விடாமல் ஊழியர்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here