தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான விடுப்பு பற்றிய தகவல் – இயக்குனர் அதிரடி உத்தரவு!

0
தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான விடுப்பு பற்றிய தகவல் - இயக்குனர் அதிரடி உத்தரவு!
தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான விடுப்பு பற்றிய தகவல் - இயக்குனர் அதிரடி உத்தரவு!
தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான விடுப்பு பற்றிய தகவல் – இயக்குனர் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் நடப்பு ஆண்டில் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு அத்துடன் மாறுதல் பெற்ற ஆசிரியர் இருந்தால் இவர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

தற்காலிக ஆசிரியர்கள்

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக TET தேர்வு நடத்தப்படவில்லை. அதனால் அரசு பள்ளிகளில் சுமார் 13000க்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் தற்போது பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளதால் ஆசிரியர் காலிப்பணியிடங்களில் தற்காலிகமான முறையில் தகுதியான ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்ப அறிவுரைகள் வழங்கப்பட்டது. தற்போது தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை நாளை 4 மணிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மேலும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் 2021-2022ம் ஆண்டு கல்வியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் ஆணை பெற்று பதிலி ஆசிரியர் இல்லாததால் அப்பணியிடம் தற்காலிக ஆசிரியரால் நியமிக்கப்பட்டால் மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியரை பணியில் இருந்து விடுப்பு எடுக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இதனை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர் வாயிலாக பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் முதன்மை கல்வி அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here