வாகன ஓட்டிகளே., மெட்ரோ பணிகளுக்காக ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்., முக்கிய அறிவிப்பு!!!

0
வாகன ஓட்டிகளே., மெட்ரோ பணிகளுக்காக ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்., முக்கிய அறிவிப்பு!!!
வாகன ஓட்டிகளே., மெட்ரோ பணிகளுக்காக ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்., முக்கிய அறிவிப்பு!!!

சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் முடிவடைந்து நாள்தோறும் 2.5 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். இதன் காரணமாக மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க 2ம் கட்ட கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டுமான பணிகள் நடைபெற இருப்பதால், பால் பண்ணை சாலை முதல் குமரப்பபுரம் முதன்மை சாலை வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி 200 அடி சாலையில் இருந்து அசிசி சாலை வரை ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் டூ வீலர், கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி. கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

ஆதார் – பான் இணைப்பு.., ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிப்பு.., தவறினால் இதுதான் நடக்கும்?

பின்னர் 200 அடி சாலையை அடைய அசிசி நகர் சாலையில் இருந்து காமராஜ் நகர் சென்று தான் வர வேண்டும். இந்த போக்குவரத்து மாற்றம் அடுத்த ஒரு வருடத்திற்கு அமலில் இருப்பதால் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here