சபரிமலை செல்லும் பக்தர்களே.., இந்த நாளில் தான் நடை திறக்கப்படும்.., கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!!

0
கேரளாவில் உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருடம் தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி மகர மற்றும் மண்டல விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இதையடுத்து இந்த பூஜைகளை காண பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலை மோதியது.
பின் கடந்த மாதம் 20ம் தேதியுடன் மகர விளக்கு பூஜை, மகர ஜோதி தரிசனம் நிறைவடைந்த நிலையில் நடை சாத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஐயப்பன் கோயில் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கேரளாவில் மலையாள மாத பிறப்பை முன்னிட்டு ஐயப்பன் கோவில் வரும் 13-ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும் என தெரிவித்துள்ளனர். இதனால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here