
EPFO நிறுவனம் சந்தாதாரர்கள் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. நிறுவன முதலாளிகளின் கூட்டு விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே ஊழியர் மற்றும் முதலாளியின் பங்கு 12 சதவீதம் என பிடித்தம் செய்யப்படும். இதில் 8.33% EPS க்கும், 3.67% EPFO க்கும் செல்கிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதற்கான விண்ணப்ப படிவம் ஆன்லைனில் பதிவேற்ற மே 3ம் தேதி வரை வாய்ப்பு வழங்கிய நிலையில் ஜூன் 26ம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்து உள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் நீண்ட காலம் அதிக ஓய்வூதியம் வழங்குவதால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 1ல் திறக்கப்படும்? சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!!
அதாவது ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.15,000 எனில் அதிக ஓய்வூதியத்திற்கு 1.16 சதவீதம் அரசு மானியமாக வழங்க வேண்டி வரும். இதன் காரணமாக தற்போது உள்ள பார்முலாவை மாற்றி புதிதாக வடிவமைக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக கருதப்படுகிறது. இருந்தாலும் இது தொடர்பாக புள்ளியியல் மற்றும் பிற தரவுகளை ஆய்வு செய்யும் “ஆக்சுவரி” அறிக்கையே முடிவு செய்யும் எனவும் கூறப்படுகிறது.