பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை நலனுக்காக சிறந்த சேமிப்பு திட்டங்களை தேடி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் திட்டம் செயல்படுவது போல் 10 வயதுக்குள் உள்ள ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம் செயல்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இத்திட்டத்தில் மாதாந்திர வைப்பு தொகை குறைந்தபட்சம் ரூ.500 எனவும், வருடத்திற்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை 15 ஆண்டுகளுக்கு சேமிக்கலாம். முதிர்வு காலம் 15 ஆண்டுகளுக்கு மேல் சேமிக்க ஆர்வம் உள்ளவர்கள் அடுத்த 5 ஆண்டு வரை இத்திட்ட பலன்களை பெற்றுக் கொள்ளலாம். முதலீட்டு தொகைக்கு தற்போது 7.6 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே மாதம் ரூ.1,000 வீதம் 15 ஆண்டுகளுக்கு 1.8 லட்சம் வரை சேமிக்கலாம். இதற்கு 7.6% வட்டி என முதிர்வின் போது ரூ.5.27 லட்சம் வரை பெறலாம்.
போடுறா வெடிய.., அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகை.., ஆரம்ப சம்பளமே 42 ஆயிரமா??
ஏதேனும் அவசர காரணங்களுக்காக முன்கூட்டியே பணம் எடுக்க இருப்பவர்கள் சேமிப்பு திட்டம் தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். உரிய காரணங்களை கூறி விட்டு முதலீடு+வட்டிகளை வரி விலக்கு இல்லாமல் பெற்று கொள்ளலாம். இத்திட்டத்தில் சேர ஆர்வமுள்ளவர்கள் அருகாமையில் உள்ள தபால் நிலையத்தை அணுகி உரிய படிவத்தை பெற்று கொண்டு குழந்தை மற்றும் பெற்றோர்/பாதுகாவலர்களின் அடையாள ஆவணங்களை இணைத்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆரம்ப தொகையாக ரூ.500 செலுத்தி பாஸ்புக்கை பெற்றுக்கொள்ளலாம்.