தமிழகத்தில் தீவிரமெடுக்கும் இன்புளூயன்சா காய்ச்சல்.,, அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய வேண்டுகோள்!!

0
தமிழகத்தில் தீவிரமெடுக்கும் இன்புளூயன்சா காய்ச்சல்.,, அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய வேண்டுகோள்!!

பருவநிலை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவி வரும் இன்புளூயன்சா காய்ச்சலால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இன்புளூயன்சா காய்ச்சல்:

தமிழகத்தில் இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பு தீவிரமெடுத்து வருவதால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இன்புளூயன்சா வைரஸ் நிலவரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் இன்புளூயன்சா காய்ச்சலால் 465 பேர், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

unnamed (1).png

அதாவது 5 வயதுக்கு உட்பட்ட 81 குழந்தைகளும், 14 வயதுக்கு உட்பட்டவர்களில் 62 பேரும், 65 வயதுக்கு உட்பட்டவர்களில் 223 பேரும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 99 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் உடல் வலி, தலைவலி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மக்கள் அலட்சியம் காட்டாமல் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர் ஆலோசனையை பெறுவது அவசியம்.

பொதுமக்கள் இந்த காய்ச்சல் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை, அனைத்து மருத்துவமனைகளில் 1¼ லட்சத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் தயாராக உள்ளன. இதையடுத்து ஐரோப்பிய நாடுகளில் எச்1 என்1 வைரஸ் காய்ச்சலுக்கு தனி தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் நடத்தப்பட்ட 4193 சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் மூலம் 10,89, 529 பேர் பயன் அடைந்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.

தமிழக மக்களே உஷார் – இன்று 34 மாவட்டங்களில் மழை கொட்ட போகுது! உங்க பகுதியும் இருக்கானு பாருங்க!!

இந்த இன்புளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும், அது அவசியமான ஒன்று என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து இருப்பதாகவும், டெங்கு காய்ச்சலால் 352 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here