பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி – 2வது இன்னிங்சில் தடுமாறும் ஆஸ்திரேலிய அணி!!

0

மெல்போர்னில் நடந்து வரும் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் தொடக்கத்திலே தனது 2 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

பாக்ஸிங் டே:

தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வைத்து நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 195 ரன்களுக்கு தனது ஆட்டத்தை இழந்தது. இந்தியா தரப்பில் பும்ராஹ் மற்றும் அஸ்வின் சிறப்பாக பந்து வீசினார்கள். அதன் பின் களமிறங்கிய இந்திய அணி முதலாம் நாள் ஆட முடிவில் 36 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பின் தொடங்கிய 2 ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக சுப்மங் கில் தனது அறிமுக ஆட்டத்தில் 45 ரன்கள் குவித்து தனது ஆட்டத்தை இழந்தார். அதன் பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ரஹானே மற்றும் ஜடேஜா இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன்கள் குவித்து வந்தனர்.

அதன் பின் இந்திய அணியின் கேப்டன் ரஹானே சதம் அடித்து அசத்தினார். முடிவில் இந்தியா 2வது இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்து தனது ஆட்டத்தை இழந்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரஹானே 112 ரன்களும், ஜடேஜா 57 ரன்களும் குவித்துள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் மற்றும் நாதன் லயன் தலா 3 விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர். முடிவில் ஆஸ்திரேலிய அணி 131 ரன்கள் பின்தங்கி இருந்தனர்.

தற்போது ஆஸ்திரேலிய அணி தனது 2வது இன்னிங்சை துவக்கியது. ஆஸ்திரேலியாவிற்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க ஆட்டக்காரரான ஜோ பர்ன்ஸ் 4 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் வேகத்தில் வீழ்ந்தார். அதன் பின் களமிறங்கிய மார்ன்ஸும் 28 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் சுழலில் சிக்கினார். ஆஸ்திரேலிய அணி 42 ரன்களுக்கு தனது 2 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் தலா 1 விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.

லைவ் ஸ்கோர்:

ஆஸ்திரேலிய அணி – 65\2
மாத்தியூ வேட் – 27
ஸ்மித் – 6

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here