அர்த்தநாரீஸ்வரர் தோற்றத்தில் பிகில் பட நடிகை…!ஷூட்டிங் அனுபவங்களை பகிர்ந்த பாண்டியம்மா!!!

0

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான பிகில் படத்தில் நடித்து மக்களுக்கு அறிமுகமானவர் இந்திரஜா சங்கர். இவர் தற்போது ஆணும் பெண்ணும் கலந்த அர்த்தநாரீஸ்வரர் தோற்றத்தில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். மேலும் இந்த புகைப்படத்தோடு சேர்ந்து அந்த படத்தின் ஷூட்டிங் அனுபவத்தையும் பகிர்ந்து உள்ளார். மேலும் இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

விஜய் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் பிகில். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா அவர்கள் நடித்திருப்பார். மேலும் இந்த படம் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்ட ஒரு படம். இது நல்ல வசூல் சாதனையை படைத்த படம் ஆகும். மேலும் இந்த படத்தில் ஒரு மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் அவர்கள் நடித்திருப்பார். அந்த அணியின் ஒரு பெண் வீராங்கனையாக  இந்திரஜா சங்கர் நடித்து உள்ளார்.

இந்திரஜா சங்கர் என்பவர் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் அவர்களின் மகள் ஆவார். தற்போது இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது அவர் ஆணும் பெண்ணும் கலந்து இருக்கும் அர்த்தநாரீஸ்வரர் தோற்றத்தில் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அதோடு சேர்த்து அவரின் ஷூட்டிங் அனுபவங்களையும் பதிவிட்டு உள்ளார்.

அதாவது  இந்த கதாபாத்திரத்தின் படப்பிடிப்பின் போது பல போராட்டங்களை சந்தித்ததாகவும், இதற்கு உறுதுணையாக இருந்த ஒப்பனை கலைஞருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் மற்றும் லைக்ஸ்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here