சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி.., சொந்த மண்ணில் கோட்டைவிட்ட இந்திய வீராங்கனைகள்!!

0
சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி.., சொந்த மண்ணில் கோட்டைவிட்ட இந்திய வீராங்கனைகள்!!
சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி.., சொந்த மண்ணில் கோட்டைவிட்ட இந்திய வீராங்கனைகள்!!

தமிழகத்தைச் சேர்ந்த சாய் சமர்தி, தனது முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நாவ் ஹிபினோவுடன் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார்.

சென்னை ஓபன் டென்னிஸ்!!

சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் தொடருக்கான முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்சமர்தி, ஜப்பான் வீராங்கனை நாவ் ஹிபினோவை எதிர்கொண்டார். இதில் சாய்சமர்தி ஜப்பான் வீராங்கனையை சமாளிக்க முடியாமல் 1-6, 0-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஓலிவியா டிஜென்ட்ரா முலியா 6-3, 6-1 என்ற நேர் செட்டில் கசியோனோவாவை தோற்கடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதே பிரிவில் மூன்றாவது தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஆர். போசலே, தைவானை சேர்ந்த ஈ. லியாங்காவை எதிர்கொண்டு 6 – 3, 6 – 2 என்ற நேர் செட் கணக்கில் இந்திய வீராங்கனை தோல்வி அடைந்தார். மேலும் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் எல். குளுஷ்கோ, ஈ. லியாங், ஒய். நைட்டோ, கே. ஒகாமுரா, என். ஹிபினோ, ஓ. டிஜண்ட்ராமுலியா, டி.விஸ்மனே, ஜே. ஃபெட் ஆகியோர் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளனர்.

மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 12 முதல் 18 வரை இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த இறுதி போட்டியில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறாதது அனைவரிடமும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here