நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான சாதிகள் இருப்பதால், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதி இருந்தார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், “மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து கலந்தாய்வுகளை நடத்திய பிறகு தான் சரியான முடிவை எடுக்க முடியும்.” என பதில் அளித்துள்ளார்.
தமிழக சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் நியூஸ்., ஊட்டி மலை ரயில் சேவை ரத்து., பகீர் அறிவிப்பு!!!
இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைத்து 6 மாதத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். அப்போது தான் ஆளும் கட்சி திறந்த மனதுடன் இருப்பதாக ஒப்புக்கொள்ள முடியும் எனவும் கூறியுள்ளார்.