வரலாற்றில் முதல் முறை, அமெரிக்க நிர்வாகத்தில் 25 இந்திய வம்சாவளியினர் – ஜோ பிடன் நியமனம்!!

0

அமெரிக்காவில் புதிதாக உருவாக இருக்கும் அரசில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் 25 பேர் கண்டிப்பக இடம் பிடிப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 25 பேரில் 15 பேர் முக்கிய பொறுப்புகளில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய நிர்வாகம்:

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிந்த நிலையில், புதிய அதிபராக ஜோ பிடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர்கள் தலைமையில் அமெரிக்காவில் புதிய நிர்வாகம் அமைய உள்ளது. புதிய நிர்வாகத்தினை அமைக்க அனைத்து விதமான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

புதிய நிர்வாகத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடம் பிடிக்கவுள்ளனர். கிட்டத்தட்ட 25 பேர் இந்த புதிய நிர்வாகத்தில் இருக்க வாய்ப்புகள் உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த 25 நபர்களில் 15 பேருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளை சேர்ந்த நபர்களின் பங்கு வல்லரசு நாடான அமெரிக்க நிர்வாகத்தில் இருப்பது பலருக்கும் முன்னுதாரணமாக இருப்பது தெரிய வருகிறது.

புத்தாண்டு பரிசாக 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு பென்ஷன், வீட்டு வசதி!!

இது குறித்து பிடனின் தெற்காசிய நாடுகளுக்கான இயக்குனர் நேஹா திவான் கூறியதாவது, “திறமை வாய்ந்தவர்கள் ஜோ பிடன் நிர்வாகத்தில் இடம் பிடிப்பது உறுதி. நிர்வாக குழுவில் பங்கேற்று நாட்டின் வளர்ச்சிக்கு உதவி புரிவார்கள். நீரா டண்டன், விவேக் மூர்த்தி, ரோகினி கோசோக்ளு, அலி சாய்டி, பரத் ராமமூர்த்தி, வேதாந் பட்டேல், வினய் ரெட்டி, கவுதம் ராகவன் ஆகியோர் அவரது நிர்வாகத்தில் இடம் பெறுவர்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here