சீனாவில் களைகட்டிய ஆட்டம்.., எகிப்தை வீழ்த்திய இந்திய அணி.., இப்படி ஒரு தொடர் வெற்றியா??

0
சீனாவில் களைகட்டிய ஆட்டம்.., எகிப்தை வீழ்த்திய இந்திய அணி.., இப்படி ஒரு தொடர் வெற்றியா??
சீனாவில் களைகட்டிய ஆட்டம்.., எகிப்தை வீழ்த்திய இந்திய அணி.., இப்படி ஒரு தொடர் வெற்றியா??

உலக டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளனர்.

டென்னிஸ் போட்டி

உலகக் குழு டேபிள் டென்னிஸ் போட்டி சீனாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த டென்னிஸ் தொடரில் இந்தியாவை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். அதன்படி குரூப் B பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, எகிப்தின் ஹனா கோடாவை எதிர்கொண்டார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதில் இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 11-6, 11-4, 11-1 என்ற நேர் செட் கணக்கில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா வெற்றி பெற்று நாக்-அவுட் ஆட்டத்திற்குள் நுழைந்தார். மேலும் இந்த குரூப் B பிரிவில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் ஜெர்மனி அணி முதலிடத்திலும், இந்திய அணி 2 ஆம் இடத்திலும் உள்ளனர்.

உங்களுக்கு இது தேவையா., ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ஈட்டி எறிதல் வீரர்., 4 ஆண்டுகள் விளையாட தடை!!

அதே போன்று ஆண்களுக்கான ஆட்டத்தில் குரூப் 2 ஆம் பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் ஜி, சத்தியன், கஜகஸ்தானின் டெனிஸ் சோலுதேவ்வை எதிர்கொண்டார். அதன் படி நடைபெற்ற ஆட்டத்தில் 11-1, 11-9, 11-5 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் அதிரடியாக வெற்றியை தனதாக்கி கொண்டார். இதனை தொடர்ந்து இந்த அணி அடுத்த ஆட்டத்தில் பிரான்ஸை எதிர்கொள்ள உள்ளது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி காலிறுதி ஆட்டத்திற்குள் நுழைய முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here