இந்திய ஆடவர் அணியானது, 10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக, வரும் நவம்பர் 23ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்க உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியை விரைவில் பிசிசிஐ நிர்வாகம் அறிவிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
TNPSC குரூப் 4: 2013 ன் பொது அறிவு வினா விடை தொகுப்பு…, யூஸ் பண்ணிக்கோங்க தேர்வர்களே!!
அந்த அறிவிக்கப்படும் அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வழிக்கப்பட்டு, ஐபிஎல் தொடரில் ஜொலித்த ருதுராஜ் , சிவம் துபே போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என தெரிகிறது. மேலும் 2023 சையத் முஷ்டாக் அலி தொடரில் அதிரடியாக விளையாடி அனைவரின் கவனத்தை ஈர்த்த ரியான் பராக் இணைக்க பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. தற்போது இந்த தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.