ஐசிசி 2023 உலக கோப்பை தொடர் 10 அணிகளுக்கு இடையை கடந்த அக்டோபர் 5ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரை இந்தியா அல்லது ஆஸ்திரேலியா அணிகளில் ஏதேனும் ஒரு அணி தான் சாம்பியன் பட்டத்தை தட்டி செல்லும் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இத்தொடருக்கு அடுத்தபடியாக இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது இந்த தொடரில், தற்போதைய இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளித்து விட்டு, முழுக்க முழுக்க இளம் வீரர்களை களம் இறக்க உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் நடப்பு உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக நியமிக்க படலாம் எனவும் தெரிய வந்துள்ளது. விரைவில் இத்தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நிர்வாகம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா தொடருக்கான உத்தேச இந்திய அணி கீழ்க் காணலாம்.
ஆஸ்திரேலியா தொடருக்கான உத்தேச இந்திய அணி:
கில், ஐயர், ராகுல், இஷான், ஜடேஜா, பும்ரா(கேப்டன்), சிராஜ், சூர்யா, குல்தீப், இஷான், சாம்சன், அக்சர், ஷர்துல் , உனத்கட், சாஹல் & முகேஷ் குமார்.
உலக கோப்பையில் நிகழ்ந்த சோகம்.. கிரிக்கெட் வாரியம் எடுத்த அதிரடி முடிவு!!