ஆசிய கோப்பையை வெல்ல இந்திய அணி போடும் மாஸ்டர் பிளான்…, வெளியான முக்கிய தகவல்!!

0
ஆசிய கோப்பையை வெல்ல இந்திய அணி போடும் மாஸ்டர் பிளான்..., வெளியான முக்கிய தகவல்!!
ஆசிய கோப்பையை வெல்ல இந்திய அணி போடும் மாஸ்டர் பிளான்..., வெளியான முக்கிய தகவல்!!

சர்வதேச இந்திய அணியானது தற்போது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட சில சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு இளம் வீரர்கள் இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளன. இந்த டி20 தொடர் வரும் ஆகஸ்ட் 13ம் தேதியுடன் முடிவடைந்த பிறகு, இளம் இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அங்கு சென்று, இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை விளையாட இருக்கிறது. இதனை தொடர்ந்து, இந்திய அணி 50 ஓவர் வடிவிலான ஆசிய கோப்பை தொடரில் கவனம் செலுத்த உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சி செய்ய உள்ளது. கடந்த முறை வெல்ல தவறிய ஆசிய கோப்பையை இந்திய அணி தீவிர பயிற்சி செய்து இம்முறை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here