இந்தியன் சூப்பர் லீக்: சொந்த மண்ணில் அசத்திய சென்னையின் FC…, ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக கோல் மழை!!

0
இந்தியன் சூப்பர் லீக்: சொந்த மண்ணில் அசத்திய சென்னையின் FC..., ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக கோல் மழை!!
இந்தியன் சூப்பர் லீக்: சொந்த மண்ணில் அசத்திய சென்னையின் FC..., ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக கோல் மழை!!

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் சென்னையின் FC, ஜாம்ஷெட்பூரை அணியை 3-1 கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தியன் சூப்பர் லீக்:

இந்தியன் சூப்பர் லீக் தொடரில், ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக சென்னை FC அணி தனது சொந்த மண்ணில் போட்டியிட்டது. இந்த போட்டியின் ஆரம்பத்தில் இரு அணிகளும் ஒரு கோலுக்காக போராடிய நிலையில், சென்னையின் பீட்டர் ஸ்லிஸ்கோவிக் 27 வது நிமிடத்தில் அசத்தலான கோல் அடித்து அசத்தினார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் மூலம், ஆட்டத்தின் முதல் பாதியில் சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இதையடுத்து, தொடங்கிய 2வது பாதியில், இஷான் பண்டிதா 76 வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் சார்பாக ஒரு கோல் அடித்தார். இதற்கு அடுத்த நிமிடமே, சென்னையின் வின்சி பாரெட்டோ கோல் ஒன்றை அடித்து பதிலடி கொடுத்தார்.

ஐயோ ஷிவானி.., இப்படி போஸ் கொடுத்து எல்லாத்தையும் தவிக்க விடுறீங்களே.., புலம்பி தவிக்கும் இளவட்டங்கள்!!

இதனை தொடர்ந்து, 85 வது நிமிடத்தில் அப்தனாசர் எல் கயாதி சென்னை அணி சார்பாக கோல் அடித்தார். இந்த ஆட்டத்தின் இறுதியில், சென்னை அணியானது 3-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி சொந்த மண்ணில் கெத்து காட்டியது. இதில் பெற்ற வெற்றியின் மூலம், 11 அணிகள் கொண்ட புள்ளிப் பட்டியலில் சென்னை அணி 10 புள்ளிகளுடன் 6 வது இடத்தை பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here