2வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஏடிகே மோகன் பகான்…, ஹைதராபாத் அணியை வீழ்த்தி அசத்தல்!!

0
2வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஏடிகே மோகன் பகான்..., ஹைதராபாத் அணியை வீழ்த்தி அசத்தல்!!
2வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஏடிகே மோகன் பகான்..., ஹைதராபாத் அணியை வீழ்த்தி அசத்தல்!!

ஹைதராபாத் அணியை பெனால்டி ஷூட் முறையில் வீழ்த்தி ஏடிகே மோகன் பகான் அணி இந்தியன் சூப்பர் லீக்கின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து உள்ளது.

இந்தியன் சூப்பர் லீக்:

இந்தியன் சூப்பர் லீக் தொடரில், அரையிறுதிப் போட்டிகள் நேற்றுடன் நடந்து முடிந்துள்ளன. இந்த அரையிறுதியின் கடைசி போட்டியில், கொல்கத்தாவின் ஏடிகே மோகன் பகான் அணி, ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடியது. ஏற்கனவே இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி கோலின்றி சமநிலை முடிந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து, நேற்று நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் ஒரு கோலுக்காக கடுமையாக முயற்சித்தனர். இருப்பினும், ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் போடாததால் பெனால்டி ஷூட்டை நோக்கி போட்டி நகர்ந்தது. இதில், இரு அணிகளிலிருந்தும் தலா 5 வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற டெல்லி கேபிடல்ஸ்…, மந்தனாவின் RCB மீண்டும் தோல்வி!!

இந்த பெனால்டி ஷூட்டில், ஏடிகே மோகன் பகான் அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி தொடர்ந்து 2வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி போட்டியில், மும்பை சிட்டி அணியை வீழ்த்திய பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் மார்ச் 18ம் தேதி, பெங்களூரு மற்றும் ஏடிகே மோகன் பகான் அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி கோவாவில் உள்ள பண்டிட் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here