இந்தியன் ஸ்போர்ட்ஸ் ஹானர்ஸ்: யார் யாருக்கு என்னென்ன விருதுகள்?? ஃபுல் லிஸ்ட் இதோ!!

0
இந்தியன் ஸ்போர்ட்ஸ் ஹானர்ஸ்: யார் யாருக்கு என்னென்ன விருதுகள்?? ஃபுல் லிஸ்ட் இதோ!!
இந்தியன் ஸ்போர்ட்ஸ் ஹானர்ஸ்: யார் யாருக்கு என்னென்ன விருதுகள்?? ஃபுல் லிஸ்ட் இதோ!!

இந்தியாவில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக, இந்தியன் ஸ்போர்ட்ஸ் ஹானர்ஸ் என்ற தலைப்பின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 2023 ஆம் ஆண்டு வரை விளையாட்டு துறை சிறந்து விளங்கிய வீரர்களை அங்கீகரிக்கும் விதமாக கடந்த வாரம் இந்தியன் ஸ்போர்ட்ஸ் ஹானர்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், விருது பெற்ற வீரர்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதில், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற, நீரஜ் சோப்ரா ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருதையும், பளுதூக்குதல் நட்சத்திரமான மீராபாய் சானு ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதையும் வென்றுள்ளனர். மேலும், அணிகளில் இருந்து, ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் பி ஆர் ஸ்ரீஜேஷ் (ஹாக்கி), வீராங்கனை ரேணுகா சிங் தாக்கூர் (கிரிக்கெட்) பெற்றுள்ளனர். ஆண்டின் சிறந்த அணியாக முதல் U19 உலக கோப்பையை வென்ற இந்திய அணி பெற்றுள்ளது.

ஆண்டின் சிறந்த பயிற்சியாளராக – விஜய் சர்மா (பளு தூக்குதல்), வளர்ந்து வரும் விளையாட்டு வீரர் – லக்ஷயா சென் (பேட்மிண்டன்) மற்றும் வீராங்கனை ஆன்டிம் பங்கல் (மல்யுத்தம்), சிறந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் – பிரமோத் பகத் (பேட்மிண்டன்), வீராங்கனையாக அவனி லெக்ரா (ஏர் ரைபிள் ஷூட்டிங்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வாழ்நாள் சாதனையாளராக பிரகாஷ் படுகோன் (பேட்மிண்டன்), பேன் கிளப் கிரிக்கெட்டில் விசில்போடு ஆர்மி, கபடியில் கிளப் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் விருதை வென்றுள்ளனர்.

தமிழகத்தில் 100% முகக்கவசம் கட்டாயம்.., அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!!!

மேலும், T20 கிரிக்கெட் லீக்கில் ஆண்டின் நம்பமுடியாத இளம் வீரராக சுப்மான் கில்லும், அபாரமான செயல்திறனுக்காக யுஸ்வேந்திர சாஹலும் விருதை வென்றுள்ளனர். ஆண்டின் மறுபிரவேச வீரராக நீரஜ் சோப்ரா (தட மற்றும் களம்) மற்றும் ஆண்டின் மின்னேற்ற செயல்திறன் வீரராக சுப்மன் கில் (கிரிக்கெட்) விருதை உள்ளிட்ட பலர் தட்டிச் சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here