கொரோனா வைரஸிற்கு மருந்து – இறுதி நிலையை எட்டிய இந்திய விஞ்ஞானி குழு..!

0
976

சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். மேலும் 24000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு இதுவரை எந்த ஒரு நாடும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்திய விஞ்ஞானி தலைமையில் குழு..!

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இந்திய விஞ்ஞானி தலைமையிலான ஆராய்ச்சி குழு ஒன்று கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு மருந்து கண்டுபிடிப்பதில் இறுதி நிலையை எட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கிய ரத்தம் மற்றும் பிற மனித மாதிரிகளில் இருந்து கொரோனா வைரஸை தனியே பிரித்து எடுக்கும் முயற்சியில் ஆஸ்திரேலியாவின் டோஹர்ட்டி இன்ஸ்டியூட் (Doherty Institute) வெற்றி கண்டது.

சிஎஸ்ஐஆர்ஓ (CSIRO) ஆராய்ச்சி நிலையம்..!

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஆஸ்திரேலியா நாட்டின் உயர் பாதுகாப்பு வளையத்தின் கீழ் இயங்கும் சிஎஸ்ஐஆர்ஓ (CSIRO) ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸை ஆய்வகத்தில் வளர்த்தெடுக்கும் முயற்சியிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்றால் அதனை தனியே பிரித்தெடுப்பது மற்றும் ஆய்வகத்தில் வளர்த்தெடுப்பது என்ற இரண்டு செயல்முறைகளிலும் வெற்றி பெற வேண்டியது கட்டாயமான ஒன்றாகும். அந்த வகையில் எஸ்.எஸ்.வாசன் தலைமையிலான ஆய்வுக்குழு இந்த படிநிலைகளில் தற்போது வெற்றிகண்டு உள்ளதால் விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யார் இந்த எஸ்.எஸ். வாசன்..?

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

எஸ்.எஸ். வாசன் பிட்ஸ் பிலானி மற்றும் பெங்களூரு ஐஐஎஸ்சி-யில் உயர்கல்வி படித்தவர் ஆவார். மேலும் இவர் டெங்கு, சிக்கன் குனியா மற்றும் ஜிகா வைரஸ் போன்ற நோய்களுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் குழுவில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here