தனியார் மயமாகும் இந்திய ரயில்வே – 150 ரயில்கள் 100 பாதைகளில்..!

0

இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்துக்கு ஆன ரயில்வே போக்குவரத்து தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

12 ஆயிரம் கோடி..!

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

மத்திய பட்ஜெட் அறிவிப்பு படி முதற்கட்டமாக 100 வழித்தடங்களில் 150 தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்காக பட்ஜெட்டில் ரூ. 12 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே இதில் இணைய விரும்பும் தனியார் நிறுவனங்கள் அதற்காக முறையாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆதரவும் எதிர்ப்பும்..!

ரயில்வே போக்குவரத்துக்கு தனியாரிடம் சென்றால் டிக்கெட் விலையேற்றம் போன்ற பல தீமைகள் ஏற்படும் என்பதற்காக இதற்கு பொது மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் டாடா, அதானி, அம்பானி போன்ற தனியார் தொழிலதிர்பர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து இதில் பங்கேற்கவும் ஆர்வமாக உள்ளனர்.

எந்தெந்த வழித்தடங்கள்..!

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

தனியார் மயமாக்கப்பட்ட ரயில்கள் முதலில் மும்பை – டில்லி, சென்னை – டில்லி, டில்லி – ஹவுரா, ஷாலிமர் – புனே மற்றும் டில்லி – பாட்னா உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளது. இவ்வாறு இயக்கப்படும் ரயில்கள் நெடுந்தூர பயணங்களுக்கு பயன்படுத்தப்படாது எனவும் 16 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேற்கூறிய வழித்தடங்களில் வழக்கமான ரயில்கள் இயக்கப்பட்ட பிறகு 15 நிமிடம் கழித்து இந்த ரயில்கள் இயக்கப்படும்.

அனைத்தும் தனியார் கட்டுப்பாடே..!

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

இவ்வாறு தனியார் மயமாக்கப்பட்ட ரயில்களில் 160 கி.மீ மேல் வேகத்தில் இயங்கும் ரயில்களுக்கு தனியார் ஒப்பந்ததாரர் கட்டணம் நிர்ணயிக்கும் உரிமையை பெறுவார் மேலும் நிதி வசதி, ரயில்கள் பராமரிப்பு, கொள்முதல் மற்றும் இயக்குதல் என அனைத்தும் தனியார் வசமே இருக்கும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here