ரயில் பயணிகள் ரத்தான டிக்கெட்டுக்கு பணம் பெறும் முறை – இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு!!

0
indianrailways-
indianrailways-

பயணிகள் அனைவரும் ரத்தாகும் தங்கள் பயணத்தின் பயணசீட்டு கட்டணத்தை திரும்ப பெற யாரிடமும் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டாம் என்று இந்திய ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

ரயில்வே எச்சரிக்கை:

இரயில்வே பயணிகள் தங்கள் பயணத்திற்கான பயணச் சீட்டை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. எதிர்பாராத காரணங்களால் தங்கள் பயணத்தை ரத்து செய்யும் சூழ்நிலை வந்தால் தங்கள் பயணச் சீட்டை ரத்து செய்து அதற்கான பணத்தை திரும்ப பெரும் வழக்கமும் உள்ளது. இது சம்பந்தமாக இரயில்வே நிர்வாகம் பொது மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பயணச்சீட்டு கட்டணத்தை திரும்ப வழங்க பயனியரிடம் அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தென்னக இரயில்வே நிர்வாகம் ஒருபோதும் தொலைபேசி வாயிலாக கேட்காது. மோசடி கும்பலை சேர்ந்த சிலர், இது தகவல்களை தொலைபேசி வாயிலாக கேட்பதாக புகார்கள் வருகின்றன. ரயில் பயணியர் தொலைபேசி வாயிலாக தங்களின் வங்கி ஏ.டி.எம் கார்டு, கிரெடிட் கார்டு எண்கள், பாஸ்வேர்ட் போன்ற முக்கிய தகவல்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.

பயணியருடைய வங்கிக் கணக்கில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக இணைய தளத்தின் மூலமாக பதிவு செய்த பயணச் சீட்டிற்கான கட்டணத்தொகை நேரடியாக வரவு வைக்கப்படும். ரயில் நிலையத்தில் நேரடியாக பதிவு செய்த பயணச் சீட்டிற்கான கட்டணம் உரிய காலக்கெடுவில் பயனியரிடம் நேரடியாக வழங்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

டிச.27 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம், சரக்கு புக்கிங் நிறுத்தம் !!

மேலும் தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பயணிகளிடம் யாரும் தொலைபேசியில் கேட்டால், உடனடியாக ரயில்வே பயணியர் உதவி எண் 138ல் புகாரை தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here