மக்களிடம் புகழை இழந்த இந்திய பிரதமர் – கருத்து கணிப்பு முடிவால் அதிர்ச்சியில் மோடி!!

0

இந்தியா டுடே பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடியின் புகழ் 66 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் பிரதமராக செயல்பட்டு வருகிறார். 2019 ஆம் ஆண்டு இவர் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் இவரை பலர் பாராட்டினாலும் அதே சமயம் இவருக்கு விமர்சனங்களும் எழுந்தது.

தற்போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா டுடே நாளேடு மக்களிடம் ஒரு கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. இதற்கு முன்னர் 64% பேர் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது 24% ஆக அது குறைந்துள்ளது.

இதில் 23% பேர் வேலையின்மை மோடியின் அரசில் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர். பணவீக்கத்தை மோடி தலைமையிலான அரசு கட்டுப்படுத்த தவறியதாக 29% பேர் கூறியுள்ளனர். மேலும் ஊரடங்கு காலத்தில் தங்கள் வருவாய் குறைந்துள்ளதாக 69% கருத்து தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here