பிரதமர் மோடி குறித்து அவதூறு – அப்ரிடியை விளாசிய இந்திய வீரர்கள்..!

0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசிய பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து உள்ளனர்.

அப்ரிடி கருத்து:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குச் சென்ற அப்ரிடி, உலகமே கொரோனா என்கிற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதை விட மோடியின் மனமும், இதயமும் மோசமானது என பேசினார். மேலும் காஷ்மீரில் 7 லட்சம் ராணுவ வீரர்களை மோடி பணியில் ஈடுபடுத்தி உள்ளதாக கூறினார். இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில் இந்திய வீரர்கள் அதற்கு தக்க பதிலடியை அளித்துள்ளனர்.

கவுதம் கம்பிர்:

இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாஜக கட்சியின் எம்.பி.,யும் ஆன கவுதம் கம்பிர் தனது கடுமையான கண்டனத்தை பதிவிட்டு உள்ளார். அதில், சிலருக்கு வயதாகிறதே தவிர மனது வளர்ச்சி அடைவதில்லை. 16 வயது பையனைப் போல் அப்ரிடி பேச்சு உள்ளது. ஏழைகளுக்கு உணவளிக்கச் சென்று விட்டு இவ்வாறு பேசலாமா? உங்களது நாட்டைப் பாருங்கள், பணமில்லாமல் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு பேசினால் உங்களை ஒருவரும் மதிக்க மாட்டார்கள் என கம்பிர் தெரிவித்து உள்ளார்.

யுவராஜ் & ஹர்பஜன்:

இந்திய வீரர் யுவராஜ் சிங் மோடிக்கு எதிரான அப்ரிடியின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மனிதநேய அடிப்படையில் தான் அவருக்கு உதவச் சொன்னேன், இனி எப்போதும் அவருக்கு ஆதரவு கிடையாது என தெரிவித்து உள்ளார். இவரது கருத்தை ஹர்பஜன் சிங் ஏற்றுக்கொண்டு உள்ளார்.

தவான் தனது பங்கிற்கு உலகத்தில் கொரோனவால் மக்கள் செத்துக் கொண்டிருக்கும் வேளையில் காஷ்மீர் குறித்து பேசக்கூடாது. காஷ்மீர் எப்பொழுதும் எங்களுடையது தான் என தெரிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here