நாட்டின் முதல் வீராங்கனை அடுத்த போட்டிக்கு தகுதி – இதிலும் சாதனை நிகழ்த்துவாரா?

0
நாட்டின் முதல் வீராங்கனை அடுத்த போட்டிக்கு தகுதி - இதிலும் சாதனை நிகழ்த்துவாரா?
நாட்டின் முதல் வீராங்கனை அடுத்த போட்டிக்கு தகுதி - இதிலும் சாதனை நிகழ்த்துவாரா?

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பல வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ள நிலையில் இந்திய வீராங்கனை ஒருவர் தகுதி பெற்றுள்ளது ரசிகர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீராங்கனை வினேஷ் போகத் தகுதி..!

இந்திய விளையாட்டு வீரர்களை விட தற்போது வீராங்கனைகள் தான் அதிக சாதனை புரிந்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் கூட பல வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு பல பதக்கங்களை குவித்து இந்தியாவுக்கு திரும்பினர். இந்நிலையில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் 10ம் தேதி முதல் 18ஆம் தேதி வரை செர்பியா தலைநகரில் உள்ள பெல்கிரேடில் நடைபெற உள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வதற்கான தகுதி போட்டி லக்னோவில் உள்ள சாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 53 கிலோ எடைப் பிரிவில் அரியானாவை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தேர்வாகியுள்ளார். இந்த வீராங்கனை டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பல சாதனைகளோடு பதக்கங்களையும் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவருடன் இணைந்து இந்தியாவை சேர்ந்த மற்ற வீராங்கனைகளும் இடம் பிடித்துள்ளனர். அன்குஷ் (50 கிலோ), சுஷ்மா ஷோகீன் (55 கிலோ), சரிதா மோர் (57 கிலோ), மான்சி அஷ்லாவாத் (59 கிலோ), சோனம் மாலிக் (62 கிலோ), ஷிபாலி (65 கிலோ), நிஷா தாஹியா (68 கிலோ), ரீதிகா (72 கிலோ), பிரியங்கா (76 கிலோ) ஆகியோர் தங்கள் உடல் எடைப்பிரிவில் வெற்றி பெற்று உலக போட்டிக்கான இந்திய பெண்கள் மல்யுத்த அணிக்கு தேர்வாகினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here