பாகிஸ்தான் கேப்டனுக்கு இந்திய வீரர் கொடுத்த அட்வைஸ்…, இத பாபர் அசாம் ஏற்பாரா??

0
பாகிஸ்தான் கேப்டனுக்கு இந்திய வீரர் கொடுத்த அட்வைஸ்..., இத பாபர் அசாம் ஏற்பாரா??
பாகிஸ்தான் கேப்டனுக்கு இந்திய வீரர் கொடுத்த அட்வைஸ்..., இத பாபர் அசாம் ஏற்பாரா??

டி20 உலக கோப்பையில் தொடர் தோல்விக்கு பிறகு, நெதர்லாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பெற்ற பாகிஸ்தான் கேப்டனுக்கு இந்திய முன்னாள் வீரர் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

பாகிஸ்தான் அணி:

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடரின் 8 வது சீசன் அரையிறுதியை நோக்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், குரூப் 2வில் உள்ள பாகிஸ்தான் அணியானது, இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. சமீபத்தில் தான் நெதர்லாந்து அணியிடம் வெற்றி பெற்று தொடர் தோல்விக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைத்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதையடுத்து, பாகிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளை வரும் 3 மற்றும் 6 ம் தேதிகளில் போட்டியிட உள்ளது. இந்த இரு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும், அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு குறைவாக தான் உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு அட்வைஸ்கள் குவிந்து வருகின்றன.

T20 WC 2022: 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து…, 2வது இடத்தை பிடித்து அசத்தல்!!

இந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், நீங்கள் ஒரு கேப்டனாக இருக்க வேண்டும் என்றால், அணியை பற்றி அதிகம் சிந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். இவரை தொடர்ந்து, பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, 2 போட்டிகளில் மோசமாக விளையாடினால், பாபரின் செயல் திறன் குறைந்து விட்டது என்று ஆகாது என கூறியுள்ளார். மேலும், அடுத்தடுத்த போட்டிகளில் அணியை வெற்றி பாதைக்கு செல்வார் என எதிர்பார்க்கிறோம் என்று பாபர் அசாமுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here